திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து சமயபுரம், இருங்களூர்,நெய்க்குப்பை வழியாக புதூர் உத்தமனூர் வரை அரசு பஸ் (தடம் எண்-94A) தினமும் நான்கு முறை சென்று வந்தது. ஆனால் தற்போது காலையில் ஒருமுறை மட்டுமே வந்து செல்கிறது. இதனால் மதியம் மற்றும் மாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக பஸ் இல்லாமலும், இரவு 8 மணிக்கு பிறகு சத்திரம் பஸ் நிலையம் செல்ல பஸ் இல்லாமலும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பஸ்சை மீண்டும் அதே நேரத்தில் இயக்கினால் மாணவ- மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.