நாமக்கல் மாநகரில் திருச்சி சாலை மற்றும் மோகனூர் சாலைக்கு இணைப்பு சாலையாக டாக்டர் சங்கரன் சாலை உள்ளது. இந்த சாலையை ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் தலைமை தபால் நிலையம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி, எல்.ஐ.சி. அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதிக்கு வருவோர் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி செல்வதால் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.