நெய்வேலி மந்தாரக்குப்பம் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சாலையிலேயே தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.