கரூர் மாவட்டம் புகளூர் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பள்ளவாய்க்காலை ஒட்டி உள்ள கரை வழியாக செல்லும் சாலையின் ஓரத்தில் ஏராளமான செடி-கொடிகள் முளைத்துள்ளன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் இந்த சாலை வழியாக செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.