திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சியையும், குளித்தலை நகராட்சியையும் இணைக்கும் தந்தை பெரியார் பாலம், காவிரியின் மிக நீளமான பாலம் ஆகும். தற்போது அந்த பாலம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு உள்ளது. இதனை போர்க்கால அடிப்படையில் சீர் செய்து 2 ஊர் மக்கள் போக்குவரத்துக்கு வழி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.