அந்தியூர்-கோபி இடையே 5 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக 4 டவுன் பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. ஒரு அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காலையிலும், மாலையிலும் 3 பஸ்களில் அதிக அளவில் பள்ளி மாணவர்கள், பயணிகள் செல்கின்றனர். படிக்கட்டில் தொங்கியபடி செல்வதால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இவர்களின் நலன்கருதி நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?