பஸ் நிறுத்தம் அமைக்க கோரிக்கை

Update: 2024-11-03 12:33 GMT

கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே ஈசநத்தம் பிரிவு உள்ளது. ஈசநத்தம், பண்ணப்பட்டி, சூழப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள் ஈசநத்தம் பிரிவு தேசிய நெடுஞ்சாலை வரை சென்று பிறகு அங்கிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளப்பட்டி மற்றும் அரவக்குறிச்சி சென்று தான் கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய ஊருக்கு செல்ல பஸ் பிடித்து செல்ல வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் ஈசநத்தம் பிரிவு அருகே பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டால் தேசிய நெடுஞ்சாலையில் சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல இப்பகுதி மக்களுக்கும் மற்றும் கல்லூரியில் சென்று படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே ஈசாத்தம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்