சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைககு செல்வோர் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க போதிய அளவு போக்குவரத்து போலீசாரை நியமிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.