கரூர் பிரதட்சணசாலை போக்கு வரத்து மிகுந்த சாலையாகும். இந்த சாலையின் வளைவு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு சாலையை அகலப்படுத்தி சாலையின் நடுவில் தடுப்புகள் அமைக்க வேண்டும். ராமகிருஷ்ணபுரம், கோபாலபுரம் சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனேவ அந்த இடத்தில் போக்குவரத்து சிக்னல் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.