செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயத்திற்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஆனால் அங்கு செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லை. குறிப்பாக சென்னையில் இருந்து வேடந்தாங்கள் செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் வேடந்தாங்கள் வரும் பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் சென்னையில் இருந்து வேடந்தாங்களுக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.