திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், ஆமூர் கிராமத்தில் திருச்சி-முசிறி சாலையில் ஏற்கனவே இருந்த பயணிகள் நிழற்குடை வாகன விபத்தின் காரணமாக இடிந்து விழுந்தது. பின்னர் முழுமையாக அகற்றப்பட்டது. இந்த நிலையில் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த இடத்தில் மீண்டும் பயணிகள் நிழற்குடை கட்டவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.