தொடரும் விபத்துகள்

Update: 2024-10-20 12:35 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் ஊரக சாலைகளில் அவ்வப்போது அளவுக்கு அதிகமாக லாரிகளில் தேங்காய் உரி மட்டைகள் ஏற்றி செல்லப்படுகின்றன. இவ்வாறு லாரிகளில் ஏற்றி செல்லப்படும் தேங்காய் உரி மட்டைகள் மரங்கள் மற்றும் மின் கம்பிகள் மீது உரசி லாரிகளில் இருந்து சிதறி விழுந்து வருகின்றன. இதனால் சாலைகளில் சிதறி கிடக்கும் தேங்காய் மட்டைகளால் வாகன ஓட்டிகள் பலரும் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்