நெய்வேலி அருகே பெரியாக்குறிச்சியில் கடலூர்-விருத்தாசலம் சாலையில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அவைகள் திடீரென சாலையின் குறுக்கே அங்கும் இங்குமாக கடப்பதாலும், இரவு நேரங்களில் சாலையிலேயே படுத்து கிடப்பதாலும் வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.