மதுரை குரு தியேட்டர்-காளவாசல் சாலையில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேலும் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது ஏறி பொதுமக்கள் சாலையை கடக்கின்றனர். அவ்வாறு சாலையை கடக்கும் போது அவ்வழியே வரும் வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே அப்பகுதியில் போதிய மின்விளக்குகள் அமைத்தும், பொதுமக்கள் மேற்கண்டவாறு சாலையை கடக்காமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.