புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம்- பூவரசகுடி வரை 3 கிலோ மீட்டர் தூர சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அதிக அளவில் முளைத்து சாலையை ஆக்கிரமித்து உள்ளது. இதனால் இந்த சாலையில் 2 நான்கு சக்கர வாகனங்கள் சாலையை கடக்கும் போது சாலையோரம் செல்லும் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கருவேல முள்ளுகளில் மோதி பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சிலர் காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் கருவேல முள்கள் அடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் உள்ள கருவேல முட்புதர்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.