அரியலூர் மாவட்டம், செந்துறை சாலையில் உள்ள செங்குந்தபுரம் பகுதியில் ஜெயங்கொண்டம் செல்வதற்காக ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இந்த பெயர் பலகையில் தவறுதலாக ஜெயங்கொண்டாம் என எழுதப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு சரியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் சிலர் குழப்பம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தவறாக எழுதப்பட்டுள்ள ஊர் பெயர் பலகையை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.