பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் அனைத்து முக்கியமான பகுதிகளான சென்னை, கடலூர், விருத்தாச்சலம், நெய்வேலி, பாண்டிச்சேரி, திருச்சி, மதுரை, கோவை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தொழில் நகரமாம் திருப்பூர் செல்வதற்கு துறையூர், முசிறி, குளித்தலை, கரூர், காங்கேயம் வழியாக இன்று வரை நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பெரம்பலூரில் இருந்து திருச்சி சென்று அங்கிருந்து குளித்தலை, கரூர், காங்கேயம் வழியாக திருப்பூர் செல்கிறார்கள். இதனால் கால விரயம் மற்றும் பணவிரயம் அதிகமாக ஏற்படுகிறது. எனவே பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து திருப்பூருக்கு காலை மற்றும் இரவு நேரங்களில் நேரடி பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.