சங்கராபுரம் தாலுகா வடசிறுவள்ளூர் அருகே ஆரூர் செல்லும் பிரிவு சாலை பகுதியில் ஊர் பெயர் அறிவிப்பு பலகை இல்லை. இதனால் இரவு நேரங்களில் ராமராஜபுரம் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வழி தெரியாமல் இந்த பிரிவு சாலை வழியாக ஆரூர் செல்லும் நிலை உள்ளது. எனவே அப்பகுதியில் பெயர் பலகை அமைக்க வேண்டியது அவசியம்.