சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2024-09-29 14:12 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையிலிருந்து வடக்குத்தொண்டைமான் ஊரணி வரை செல்லும் சாலையில் தெற்குத்தொண்டைமான் ஊரணி பிரிவு சாலை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு சுமார் 17 ஆண்டுகள் ஆவதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த நிழற்குடையில் அமர பயணிகள் அச்சப்பட்டு வெளியே சாலையோரம் நிற்பதினால் விபத்து அபாயம் ஏற்படுவதுடன், வெயில் மற்றும் மழையில் அவர்கள் நின்று அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்