சிவகங்கை மாவட்டம் சிவகங்கை- தொண்டி சாலையில் உள்ள பஸ் பணிமனை அருகே உள்ள பஸ் நிறுத்தம் சேதமடைந்து உள்ளது. சாலை விரிவாக்க பணியின் போது இந்த பஸ் நிறுத்தத்தின் படிக்கட்டுகள் இடித்து அகற்றப்பட்டது. தற்போது பல மாதங்கள் ஆகியும் படிகட்டுகள் சீரமைக்கப்படவில்லை. எனவே பயணிகளின் நலன் கருதி பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும்.