பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலையில் இருந்து பெரியார் சிலை வரை சாலையோரம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பங்களில் ஏராளமான வயர்கள் கட்டப்பட்டு உள்ளன. இவை தாழ்வான நிலையில் செல்வதினால் பெரிய மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த வயர்கள் அறுந்து விழுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.