சேதமடைந்த பாலம்
திருப்பூர் லட்சுமி நகர் மற்றும் பிரிட்ஜ்வே காலனியில் உள்ளவர்கள் கோர்ட்டு வீதிக்கு செல்ல இந்த பாலம் வழியாக செல்கின்றனர். மேலும் சுற்றி உள்ள பனியன் நிறுவனங்களுக்கு பணிக்கு வருபவர்கள் அந்த பாலத்தை கடந்து வருகின்றனர். தினமும் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் அந்த பாலத்தை கடந்து செல்கின்றன. பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் ஒலை வைத்து சுற்றி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இங்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளதால் இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படுவதற்கு முன்பும், பாலம் முழுமையாக சேதமடைந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதற்குள்ளாகவும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-------------
கண்ணபிரான்,திருப்பூர்.
98989 88741