சங்கராபுரம் அருகே பூட்டை-பாவளம் செல்லும் சாலையில் மணியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பருவமழை தொடங்கும் பட்சத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமம் அடையும் சூழ்நிலை ஏற்படும். இதை தவிர்க்க பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.