பஸ் வசதி தேவை

Update: 2024-09-22 09:00 GMT

குலசேகரன்புதூரை அடுத்துள்ள குமரன்புதூரில் சுமார் 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் தனி பஸ் வசதியோ, இந்த ஊர் வழியாக எந்த பஸ்சும் செல்வதில்லை. இதனால், இந்தபகுதி மக்கள் பஸ்ஏறுவதற்காக சுமார் ½ கிலோமீட்டர் தூரம் சென்று நெல்லை-நாகர்கோவில் நெடுஞ்சாலைக்கு தான் செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அந்த கிராம மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குமாரன்புதூருக்கு தனி பஸ்வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்