விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர் திருக்கை வரை உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே அப்பகுதிகளிலில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.