வழிகாட்டும் பலகை பொருத்தப்படுமா?

Update: 2024-09-15 10:57 GMT
வழிகாட்டும் பலகை பொருத்தப்படுமா?
  • whatsapp icon

அரியலூர்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் வாரணவாசி கிராமத்தின் அருகே மிகப்பெரிய வளைவு ஒன்று உள்ளது. இந்த சாலையானது எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தும், கனரக வாகனங்கள் அதிகம் சென்றுகொண்டும் இருக்கிறது. இந்நிலையில் இந்த சாலையில் உள்ள வளைவு பகுதியில் விபத்து அபாயம் மற்றும் திருப்பம் உள்ளது போன்றவற்றை உணர்த்தும் வகையில் உள்ள வழிகாட்டும் பலகைகள் இன்றி வெறும் கம்பிகள் மட்டும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இவற்றை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்