மயிலம் அருகே பெரும்பாக்கத்தில் இருந்து திருவக்கரை வழியாக திருக்கனூர் செல்லும் சாலையில் மணல், ஜல்லிகளை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களின் மேற்பகுதியில் தார்ப்பாய் போட்டு மூடாமல் கொண்டு செல்கிறார்கள். இதனால் இந்த வாகனங்களில் இருந்து மணல், ஜல்லிகள் கீழே கொட்டுவதால் அதில் இருந்து பறக்கும் தூசிகளால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.