வேகத்தடை வேண்டும்

Update: 2024-09-08 12:55 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பஸ் நிலையத்தில் இருந்து சாயல்குடி செல்லும் சாலையில் சில வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் செல்கின்றனர். அதேபோல காமராஜர் சிலை அருகே உள்ள சாலையிலும் வேகத்தடை இல்லாததால் அவ்வழியே செல்வோர் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்த பகுதியில் தேவையான இடத்தில் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்