பயணிகள் கோரிக்கை

Update: 2024-09-08 12:07 GMT

சென்னை மாதவரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் சாதாரணமாக அமர்ந்து செல்லம் வகையில் உள்ளது. எனவே, மாதவரத்தில் இருந்து மதுரை, கோவை, தேனி, நெல்லை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளுக்கு படுக்கை வசதி கொண்ட அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்