திருவள்ளுர் மாவட்டம் மணலி மெயின் ரோடு அருகே உள்ள என்.எஸ்.கே. சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகளும் நிலை தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. மேலும், அவசர ஊர்திகள் வந்து செல்லவும் சிரமமாக உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீர் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.