போக்குவரத்து நெரிசல்

Update: 2024-08-25 13:53 GMT

அரியலூர் மாவட்ட தலைநகரில் ஏற்கனவே இருந்த பழைய பஸ் நிலையத்தை அகற்றிவிட்டு புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் தாலுகா ஆபீசின் தென்புறத்தில் குறுகிய சாலையில் தினந்தோறும் மினி பஸ்களை மணிக்கணக்கில் நிறுத்தி ஓட்டுனர்கள் எங்கேயோ சென்று விடுகின்றனர் . இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் நீதிமன்றம், மற்ற அலுவலகம் செல்லும் அதிகாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்