நாகர்கோவில் கோட்டார் ெரயில்வே சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. இந்த இடத்தில் சாலையில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை அகற்றியபோது முறையாக அகற்றாமல் விட்டுள்ளனர். இதனால், இரும்பு கம்பி வெளியே தெரிகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன சக்கரத்தில் இரும்பு கம்பிகள் குத்தி பஞ்சர் ஆகி விடுகிறது. பாதசாரிகளும் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் காணப்படும் இரும்பு கம்பியை முறையாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.