பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் ஊராட்சியில் புதிதாக தார் சாலை அமைக்கும்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று துறைப்பாடு அருகில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்பட்டது. வேகத்தடை அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை வெள்ளைவர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளது. இதனால் வெளியூரிலிருந்து வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.