பஸ் வசதி வேண்டும்

Update: 2024-08-25 11:23 GMT

திருச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து பெங்களூருவுக்கு துறையூர், கொப்பம்பட்டி, தம்மம்பட்டி, வாழப்பாடி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பல பஸ்கள் மாறி மாறி பயணம் செய்கின்றனர். இதனால் பண விரயம் மற்றும் கால விரயம் ஏற்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசு மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனே இதில் தலையிட்டு, பெங்களூருக்கு நேரடி பஸ் வசதி செய்துதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்