கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-08-25 10:06 GMT

மணல்மேடு வழித்தடத்தில் இயக்கப்படும் கும்பகோணம்,சீர்காழி செல்லும் பஸ்களில் பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக மணல்மேடு,கடலங்குடி,திருச்சிற்றம்பலம்,திருவாளப்புத்தூர்,பட்டவர்த்தி ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிகள், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்பவர்கள் என பல தரப்பு மக்களும் மணல்மேடு வழித்தடம் வழியாக செல்லும் பஸ்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட வழித்தடத்தில் குறைந்த அளவிலே பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கும்பகோணம், சீர்காழிக்கு செல்ல மணல்மேடு வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்