அரியலூர் நகரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் இடதுபுறம் மின்சாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி உள்ளது. இந்நிலையில், இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட காரணத்தால், மின்மாற்றி தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் மின்மாற்றியில் உள்ள இரும்புகள் கம்பிகள் ஒவ்வொன்றாக வெளியில் தெரிகிறது. மேலும் மின்மாற்றியானது பலமின்றி காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த மின்மாற்றி கீழே விழும் அபாயம் உள்ளது. மேலும் இந்த வழியாக பலரும் பயணம் செய்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.