சென்னை அண்ணாசாலை, ஜி.பி. சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் ஏராளமாக கார்கள் சரி செய்யும் கடைகள் உள்ளது. நடுரோட்டில் வைத்து சில கார்கள் சரி செய்யப்படுவதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் ஆம்புலன்சு, பள்ளி வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதி அடைகின்றனர். நடுரோட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தும், போக்குவரத்தை சரி செய்யவும் அண்ணா சாலை போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.