சிதம்பரம் நான்கு மாட வீதிகளில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் இரவு நேரங்களில் சாலையில் படுத்து கிடக்கின்றன. இதனால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் விரைந்து மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.