விழுப்புரத்தில் இருந்து விக்கிரவாண்டி அருகே அத்தியூர் திருக்கை கிராமத்திற்கு போதிய பஸ் வசதி இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ள விழுப்புரம் சென்றுவர பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?