பஸ் வசதி வேண்டும்

Update: 2024-08-11 12:09 GMT

அரியலூரில் இருந்து திருப்பதி, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர் , வேளாங்கண்ணி, மதுரை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், ஒசூர், ஈரோடு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்வதற்கு நேரடியாக பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் திருச்சி அல்லது தஞ்சாவூர் சென்று மேற்கண்ட ஊர்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் நேர விரயமும், அதிகப்படியான செலவு ஏற்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரியலூரில் இருந்து நேரடியாக மேற்கண்ட ஊர்களுக்கு பஸ் வசதி அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி