அரியலூர் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில், கடந்த 2016-ம் ஆண்டு தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையும் அரியலூர் மாவட்டம் முழுவதும் கனரக வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் இயங்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. ஆனால் தினமும் தடை செய்யப்பட்டுள்ள நேரங்களில் குறிப்பாக காலை 7 மணி முதல் வி.கைகாட்டி மற்றும் வி.கைகாட்டியிலிருந்து சேலத்தார் காடு, மு.புத்தூர் கிராமங்களின் வழியே தினமும் எண்ணற்ற டிப்பர் லாரிகள் தடை செய்யப்பட்ட நேரத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.