பயனற்ற நடைபாதை மேம்பாலங்கள்

Update: 2024-07-28 17:47 GMT

நாமக்கல் நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலை குறைக்க நாமக்கல் பஸ்நிலையத்தில் மோகனூர் சாலை செல்லும் வகையிலும், பிரதான சாலையை கடக்கும் வகையிலும், போலீஸ் நிலையம் எதிரிலும் 3 நடைபாதை மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இந்த 3 பாலங்களும் தற்போது எவ்வித பயனும் இல்லாமல் உள்ளன. பிரதான சாலையை கடக்கும் மேம்பாலம் சில நேரங்களில் திறந்தவெளி பாராகவும் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த 3 நடைபாதை மேம்பாலங்களையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்