பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் சாலையோரம் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இந்த நிலையில் இப்பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.