பயணிகள் நிழற்குடையை காணோம்

Update: 2024-07-28 12:40 GMT

பயணிகள் நிழற்குடையை காணோம்

திருப்பூர் காங்கயம் ரோடு சி.டி.சி. கார்னர் பகுதியில் பயணிகளுக்கான நிழற்குடை உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த நிழற்குடையில் நின்று பஸ் ஏறி வந்தனர். இந்த நிலையில் நிழற்குடையின் ஒரு பகுதி அரசு பணிக்கு பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களை வைப்பதற்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிழற்குடை முன்பாக மணல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நிழற்குடையை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நிழற்குடையில் நிற்பதற்கான வாய்ப்பு இல்லாத காரணத்தால் பயணிகள் நிழற்குடைக்கு அருகே ரோட்டில் நின்று பஸ் ஏறி வருகின்றனர்.எனவே பயணிகளின் நலன் கருதி நிழற்குடையை மக்கள் பயன்படுத்துவதற்கு தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

-----

பிரபு,திருப்பூர்.

87997 76736

மேலும் செய்திகள்