போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2024-07-28 10:46 GMT

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது மு.புத்தூர் கிராமம். இந்த கிராமத்தின் வழியாக பல்வேறு ஊர்களிலிருந்து தினமும் அரியலூருக்கு பொதுமக்கள் அதிகளவில் இருசக்கர வாகனங்களில் கூலி வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில் மு.புத்தூர் கிராமத்தில் இயங்கும் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் நுழைவாயில் அருகே ஆபத்தான வளைவு பகுதியில் கருவேல முட்கள் போக்குவரத்திற்கு இடையூராகவும், சாலையில் உள்ள வெள்ளை நிற பட்டைகளை மறைத்தும் நெடுஞ்சாலை துறையினர் வைத்துள்ள பலகைகள் மீது அதிகளவில் வளர்ந்துள்ளது. மேலும் இந்த சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையால் புதிதாக போடப்பட்டது. ஆனால் இதுவரை பராமரிப்பு பணி ஏதும் நடை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்