சமீபகாலமாக அரவக்குறிச்சி நகரப் பகுதிக்குள் இருசக்கர வாகனங்கள், கார், வேன், லாரி உள்ளிட்ட பலதரப்பட்ட வாகனங்களும் ஆங்காங்கே ரோட்டுப் பகுதியில் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அரவக்குறிச்சி நகர பகுதிக்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் மாணவ- மாணவிகள் மெயின் ரோடு பகுதியில் நடந்து செல்லமுடிவதில்லை. மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் இப்பதியில் சில நேரங்களில் சிறு சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அரவக்குறிச்சி நகரப் பகுதிக்குள் ரோட்டுப் பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.