மார்த்தாண்டத்தில் இருந்து குழிச்சல் பகுதிக்கு 89 ‘சி’ அரசு பஸ் தினமும் வந்து செல்கிறது. குழிச்சல் கிராமத்தில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் அழகல் மானசேகரம் கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பொருமாள் கோவில் மற்றும் பல தொழில் கூடங்கள் உள்ளன. எனவே, பொதுமக்களின் வசதிக்காக மார்த்தாண்டம்-குழிச்சல் அரசு பஸ்சை அழகல் மானசேகரம் கிராமம் வரை நீட்டிப்பு செய்து இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீரங்க பாபு, அருமனை.