பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் அமைக்கப்பட்டு உள்ள பாதாள சாக்கடை மூடியானது சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த மூடி உடைந்து வாகனம் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.