பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் சாலை விரிவாக்க பணிகளும் மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்காக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு அதனை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இதன் அருகில் செயல்பட்டு வரும் கல்குவாரி கிரசர் தொடர்ந்து இயங்குவதால் இப்பகுதி புகை மண்டலம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.