போக்குவரத்து நெரிசல்

Update: 2024-07-14 17:49 GMT

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே சென்னை பஸ்கள் சந்திக்கும் சாலை, சேலம் பஸ்கள் சந்திக்கும் சாலைகள் அமைந்துள்ளன. இந்த இடத்தில் சிக்னல் இல்லாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பாலத்தின் அடியில் 4 திசைகளிலும் வாகனங்கள் மோதி கொள்வது போல வருகின்றன. அடிக்கடி பாலத்தின் அருகே விபத்துக்களும் நடந்து வருகின்றன. எனவே ஆவின் மேம்பாலம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்